January 23, 2011
Subscribe to:
Post Comments (Atom)
சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
தெரிந்து கொள்ளாவிட்டால் து£க்கம் வராது என்றுபுலம்பும் வாசகர்களுக்காக சில வரிகளில்...
சொல்கேளான்... பொல்லாதவன்...
பொய் சொல்லாதவன்...
நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வம்புக்கும் தும்புக்கும் போகிறவன்..
முன்று முறை தேர்வு எழுதி
பள்ளிப் படிப்பைத் தாண்டாதவன்
மடையர்கள் சூழ்ந்த உலகில்
வாழ்ந்து கொண்டிருப்பவன்..
இந்த முகத்தையும் கணனியில் போட்டு
இந்த வயதிற்கும் சலிக்காமல்
கணனி கற்றுக் கொடுத்து
ஆசானாய் நண்பனாய்
விளங்கும் மகன் ஆனந்தை
மனதிற்குள் போற்றி பாராட்டி மகிழ்கிறவன்..
எங்கெங்லாம் இருள் இருக்கிறதோ
அங்கெல்லாம் மெழுகுவத்தியாய்
ஒளி வழங்குகிறவன்...
சட்ட ரீதியாகத் தவறு செய்யாதவன்..
இரண்டு கவிதைத் தொகுதிகள்
நான்கு கட்டுரை நு£ல்கள் எழுதியிருப்பவன்..
உன் அறிவைக் கொண்டு சிந்தி
என்று சொன்ன பெரியாரையும்
உலகில் எங்கு அநீதி நடந்தாலும் அதைக்
கண்டு நீ கோபப்படுகிறாய் என்றால்
நீயும் நானும் நண்பனே என்று சொன்ன சேகுவராவையும் பாராட்டுகிறவன்..
------இந்த அளவுக்குப் போதுமென்று
நிளைக்கிறேன். இதற்குள் நீங்கள் வேறு தளங்களுக்கும் வலைப் பக்கங்களுக்கும்
போயிருப்பீர்கள்..காதல் கவிதைகளைத் தேடி...
போகாதவர்கள்..கை கொடுங்கள்..
மக்களைச் சிந்திக்க வைப்போம்...
வாழப் போகும் குறைந்த நாட்களில்...
No comments:
Post a Comment