May 8, 2011

நிரந்தரமாய்....

வியப்பாக இருக்கிறது
எங்கள்  தெருவில்
சண்டை சச்சரவு இல்லை..

ஆட்டம் பாட்டம் இல்லை
கூச்சல் குழப்பம் இல்லை
அடிதடி கலாட்டா இல்லை
வாகன நெரிசல் இல்லை...

ஒடுங்கிய பிளாஸ்டிக்
குப்பைகள் இல்லை
தினம் நடக்கும்
சாலை விபத்துகள் இல்லை..

ஆடு, மாடு, கோழி
மீன் முட்டை
மசாலா வாசனை
எதுவும் இல்லை..

மக்கள் உடல் நலன்
பாதிப்பு இல்லை
ஏழை எளியவர்க்கு
செலவு இல்லை...

இரு நாட்கள் மட்டும்
மதுக் கடைகளை மூடிய
தேர்தல் ஆணையமே...

எங்களை நீயே
ஆளக்கூடாதா...
நிரந்தரமாய்.....

நன்றி....தினமலர்... புதுமலர்...29.04.2011

1 comment:

  1. ரொம்ப நல்லாருக்கு சார்

    ReplyDelete