May 9, 2010

தவிர....

ஐ.பி.எல்லில்
விளையாடும்
கோடிகள்..

போலி மருந்துகளில்
மறைந்துள்ள
கோடிகள்

அர்சத்மேத்தா
அச்சடித்த
போலிப் பத்திரக்
கோடிகள்...

தேர்தல்களில்
கொட்டப்படும்
கோடிகள்...

திரைப்படத் தயாரிப்பில்
கரைக்கப்படும்
கணக்கில் வராத
கோடிகள்..

உரபேரம்
ஊறுகாய் பேரம்
பேர்பாக்ஸ் பேரம்
ஸ்பெக்ட்ரம் பேரம்

அரசியல்வாதிகளின்
சொத்துக் குவிப்பு
லஞ்ச ஊழல்
வன்முறை...அராஐகம்
சுவிஸ் வங்கியில் பணம்

எதைப் புடுங்க முடிகிறது
இந்த அரசுகளால்-?
கஞ்சிக்கு இல்லாதவர்கள்
துர்க்கும் துப்பாக்கியைத் தவிர...?
                                          
                     •••••••

1 comment:

  1. அரசு செயலபடும் விதத்தை இவ்வளவு எளிமையாக சொல்ல முடியாது. கவிதை சரியான சவுக்கடி.

    ReplyDelete